4 மடங்கு லாபம் கொடுத்த டிரேடிங்? பூரித்துபோய் அரை கோடியை கொட்டிய தொழிலதிபர் - கடைசியில் பொறி கலங்கி போன அதிர்ச்சி
ஆன்லைன் டிரேடிங் எனக் கூறி 52 லட்சத்தை மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கேடிசி நகரைச் சேர்ந்த தொழிலதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிகமான லாபம் சம்பாதிக்கலாம் என ஒரு எண்ணிலிருந்து தகவல் வந்து இருக்கிறது.இதனை நம்பிய தொழிலதிபர் சில லட்சங்களை அதில் முதலீடு செய்து இருக்கிறார்.இதற்காக அவருக்கு நான்கு மடங்கு லாபத்தைக் கொடுத்து ஆசை வலை விரித்து இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபத்தைப் பெறலாம் எனக் கூறி இருக்கின்றனர்.இதனைத் தொடர்ந்து அந்த தொழிலதிபர் சுமார் 52 லட்சம் ரூபாயை அந்த செயலியில் முதலீடு செய்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அவரை ஏமாற்றி பணத்தை மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாகத் தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த அஜ்மல் என்பவரைக் கைது செய்துள்ளனர்.