தக்காளி கிலோ 60 ரூபாய் - புதுக்கோட்டையில் புதுமையான ரேஷன் கடை

x

தக்காளி கிலோ 110 ரூபாய்க்கு வாங்கப்பட்டு, ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில், ரேஷன் கடையில் பேடிஎம் மூலமாக பணம் செலுத்தும் திட்டத்தையும், ரேஷன் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தையும் ஆட்சியர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி மார்க்கத்திலிருந்து தக்காளி கிலோ 110 ரூபாய்க்கு வாங்கப்பட்டு, பொதுமக்களுக்கு கூட்டுறவுத் துறை மூலமாக ரேஷன் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்