"சென்னை - திருச்சி NH ரோட்டில் தினம் தினம் நடக்கும் மெகா மோசடி"பகீர் கிளப்பும் வாகன ஓட்டிகள்

x

தமிழகத்தில் விதிகளை மீறி செயல்படும் சுங்கச்சாவடிகளால் வாகனங்களுக்கான பயண செலவுகள் அதிகரிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்....

தமிழகத்திற்குள் வணிக பயன்பாடு தொடங்கி அன்றாடம் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளுக்கு பெருந்தொல்லையாக இருந்து வருகிறது சுங்கச்சாவடிகள்..

தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 381 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இதற்காக மொத்தம் 29 சுங்கச்சாவடிகள் உள்ளன.

இந்த சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைத்த முதலீட்டை திரும்பப் பெறும் வரை கட்டணம் வசூலிக்கப்படுகின்றன..

அதன் பின்னர், 40 சதவீத சாலை பராமரிப்புக்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது விதி. மேலும் ஒவ்வொரு ஆண்டும் 8 முதல் 10 சதவீதம் வரை சுங்க கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம்..

இதன் படி, நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் 24 சுங்கச்சாவடிகளுக்கு தமிழகத்தில் கட்டணம் உயர்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், குத்தகைக்கு எடுத்துள்ள சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் யாரும் முறையாக விதிகளை பின்பற்றுவது இல்லை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன...

விதிகளை மீறி தொடர்ந்து செயல்படும் சுங்கச்சாவடிகளால் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், மற்றும் கட்டுமானப் பொருட்கள் எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பயண செலவுகள் அதிகரித்து வருவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உதாரணமாக சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல, மொத்தம் 14 சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால் சுமார் ஆயிரத்து 195 ரூபாய் வரை சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது...

இப்படி தமிழ்நாட்டிற்குள் பல மாவட்டங்களில் செல்வதற்கு அதிக பணம் செலவழிப்பதே தொடர்கதையாவதாக குமுறுகின்றனர் ஓட்டுநர்கள்..

இதனால், விதிமுறைகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்கள் துயரை போக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் வாகன ஓட்டிகள்..


Next Story

மேலும் செய்திகள்