இரவு 9 மணி தலைப்புச்செய்திகள் (10-10-2023)
- போர் முடியும் வரை பணய கைதிகளை விடுவிக்க முடியாது என ஹமாஸ் அமைப்பு இன்று திட்டவட்டம்...காசாவில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் படையினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அதிர்ச்சி தகவல்...
- இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்...இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி இன்று உறுதி...தமிழர்களுக்கு கூடுதல் உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு...
- 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வணிக வரி, வட்டி மற்றும் அபராதத் தொகை முழுவதுமாக தள்ளுபடி...சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு...இஸ்லாமிய கைதிகள் விவகாரத்தில் முதல்வர் - ஈ.பி.எஸ். இடையே காரசார விவாதம்...
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகையில் விடுபட்டவர்கள் குறித்து சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்...தகுதி உள்ள மகளிருக்கு நிச்சயம் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...திருநங்கைகளும் பயன் அடையலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு...
- நீர்மட்டம் குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு இன்று முதல் நிறுத்தம்...5 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி நிலங்கள் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை...தமிழ்நாடு அரசின் தீர்மானம் பற்றி கவலை இல்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி...
- புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று திடீர் ராஜினாமா...ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராட முடியவில்லை என பரபரப்பு கடிதம்...
Next Story