வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்..இன்று சிக்கிய டெல்டா... சென்னைக்கும் இருக்கு
வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்..இன்று சிக்கிய டெல்டா... சென்னைக்கும் இருக்கு - வானிலை மையம் அலர்ட்
4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது...கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது. இது மேலும் இரு தினங்களில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.இந்நிலையில் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.