#Breaking : ``நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை இல்லை''... வெளியான அறிவிப்பு

x

நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை வழக்கம்போல் இயங்கும் - மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு

"நெல்லை மாவட்டத்தில் மழை பொழிவு முற்றிலும் நின்றுள்ள நிலையில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும்"

திருநெல்வேலி மாவட்டத்தில் மழைப்பொழிவு தற்போது முற்றிலும் நின்றுள்ள நிலையில் நாளை பள்ளிகள் கல்லூரிகள் செயல்பட உள்ளன.

தாமிரபரணி கரையோர கிராமங்களில் பள்ளிகளை திறப்பதற்கு முன்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் தொடர்புடைய உள்ளாட்சியைச் சார்ந்த அலுவலர்கள் முழுமையாக ஆய்வு செய்து பாதுகாப்பினை உறுதி செய்த பின்பே மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.

பள்ளிகளில் நீர் தேங்கி இருந்தாலோ வேறு பாதிப்புகள் இருந்தாலோ உடனடியாக முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்து பள்ளிக்கு விடுமுறை அளிக்க தொடர்புடைய தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்