அதிரடி உத்தரவு... அனைத்து ஸ்கூல்களுக்கும் பறந்த எச்சரிக்கை... ஷாக்கில் பள்ளிகள்

x

பள்ளிகளில் பாதபூஜை நடத்தினால் கடும் நடவடிக்கை என மாவட்ட கல்வி அதிகாரி சுற்றறிக்கை அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

மாணவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் , அவர்களின் ஆசீர்வாதத்தை வேண்டியும் பாத பூஜை செய்யும் நிகழ்வுகளை சில தனியார் பள்ளிகள் நடத்தி வருகின்றனர்

இந்த நிகழ்வின் போது பெற்றோர்களைப் பள்ளிக்கு வரவழைக்கும் பள்ளி நிர்வாகம், அவர்களை வரிசையாக அமர வைத்து அவர்களது பாதங்களை மாணவர்கள் தண்ணீரால் கழுவி பின்னர் பூக்களை அவர்களின் பாதங்களில் வைத்து பூஜை செய்து வணங்குகின்றனர்.பொதுத் தேர்வை எதிர் கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் சில கல்லூரிகளில் இறுதி ஆண்டில் இந்த நிகழ்வு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் லீலாவதி வெளியிட்ட சுற்றறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதில் பாத பூஜை என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான புகார்கள் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் பொதுத் தேர்வுக்கு முன்பாக நடத்தப்படும் பாதபூஜைகளை தவிர்க்க வேண்டும் அந்த புகார்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே அதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் பாதபூஜை நிகழ்வுகள் நடத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மாவட்ட கல்வி அலுவலரின் சுற்றறிக்கைக்கு ஒரு தரப்பினர் ஆதரவும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ள நிலையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் தினத்தன்று மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்த விவகாரம் கடும் சர்ச்சைக்குள்ளானது. இந்த சம்பவம் தொடர்பாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்