வெளுத்து எடுக்கப்போகும் கனமழை? - தேதியை குறித்த வானிலை ஆய்வு மையம்! | TN Rains
25ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
"தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, 25ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வலுபெற்று வடமேற்கு திசையில் நகரும்"
"தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி முதல் குமரிக்கடல் பகுதி வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது"
"29ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்காலில் மிதமான மழையும் பெய்யக்கூடும்"
"25ஆம் தேதி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்"
"25 ஆம் தேதி கடலூர், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு"
தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்