வானத்தை பிளந்து கொட்டிய பேய் மழை... வயலில் சாய்ந்த 1000 ஏக்கர் நெற்பயிர்கள் | TN Rains

x

நாகை கடைமடை பகுதியில் கனமழை பெய்ததால் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் பரப்பிலான குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்தன... கீழ்வேளூர் ஓர்குடி, கிள்ளுக்குடி, இறையான்குடி, கொடியாலத்தூர், மோகனூர் உள்ளிட்ட இடங்களில் அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில், நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்... தஞ்சை திருவாரூரில் இருந்து வரக்கூடிய தண்ணீரும் சேர்ந்து கொள்வதால், நீர் வடிவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முளைக்க துவங்கி விட்டன... ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில், வயல்களில் மூழ்கிக் கிடக்கும் மீதமுள்ள பயிர்களை காப்பாற்ற வேளாண்துறை அதிகாரிகள் விரைந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்