``ஊரே தண்ணீருக்குள்-20 நாட்களாக வடியாத சோகம்..'' ``பாம்பு வருது-உயிர கைல புடிச்சிட்டு இருக்கோம்..''

x

மீஞ்சூர் பேரூராட்சியின் 1வது வார்டிற்கு உட்பட்ட கலைஞர் நகர் குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2வாரங்களுக்கு முன் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் கனமழை கொட்டியதால் வீடுகளை மழைநீர் சூழ்ந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மழை ஓய்ந்து 2வாரங்களாகியும் தண்ணீர் முழுமையாக வடியாத நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு மேலாக மழைநீர் தேங்கி நிற்பதால் கழிவுநீருடன் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்