வலுவிழக்கும் முன் கடைசியாக ஒரு ஆட்டம் - சென்னையை சுற்றி ஒரு காட்டு காட்டிய திடீர் மழை

x

சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளபடி காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

காலை நேரத்திலேயே மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

வட தமிழக வடலோர பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த பாட்டெடுத்த தாழ்வு மண்டல தொகுதி இன்று அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

அதன்படி காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வந்த நிலையில் தற்பொழுது கனமழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள், ஒலிமுகமது பேட்டை,திம்ம சமுத்திரம், கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம்,பாலு செட்டி சத்திரம், தாமல்,விஷார், விப்பேடு, செவிலிமேடு, ஐயங்கார் குளம், ஓரிக்கை, களக்காட்டூர், தேனம்பாக்கம், நத்தப்பேட்டை, கருக்குப்பேட்டை,கீழ் ஒட்டிவாக்கம், வாலாஜாபாத், ஏனாத்தூர், வையாவூர் களியனூர், காரை,பரந்தூர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

காலை நேரத்திலேயே மழை பெய்து வருவதால் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்