விடாமல் அடிக்கும் தொடர் கனமழை - கடும் அவதியில் தமிழக மக்கள் | TN Rains | Weather Update | Rain
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கனமழை கொட்டியதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்றனர்.
தென்காசியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை
வெளுத்து வாங்கியது. தென்காசி நகரப்பகுதிகள் மற்றும் குத்துக்கல்வலசை, குற்றாலம், இலஞ்சி, செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
திருத்தணி அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, திருவலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை பெய்ததால் குளிர்ந்த சூழல் நிலவுகிறது.
தாராசுரம், சுவாமிமலை, அம்மாசத்திரம் உள்ளிட்ட கனமழை கொட்டிதீர்த்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.