"வெளுத்தெடுக்கும் கனமழை..! பள்ளிகளுக்கு விடுமுறை..?"கலெக்டர் அதிரடி உத்தரவு | TN Rain

x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது...

நாகையில் வெளிப்பாளையம், திருமருகல், திட்டச்சேரி, புத்தூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, தலைஞாயிறு, வேதாரண்யம், திருக்குவளை, வலிவலம், தேவூர், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் 37.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது....

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ் புதூர், நெற்குப்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே கனமழையும் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது... இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என்று ஆட்சியர் ஆஷா அஜித் அறிவுரையின்படி பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்...

சிவகங்கை நகர் மையப்பகுதியில் உள்ள அரண்மனை வாசல் காந்தி வீதியில் ஆங்காங்கே சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திற்குள் மழை வெள்ளம் புகுந்தது. கழிவுநீருடன் மழை நீரும் சேர்ந்து முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால்

பேருந்துகளை பேருந்து நிலையத்திற்கு வெளியிலேயே நிறுத்தி பொதுமக்களை ஏற்றிச் செல்லும் நிலை உருவாகி உள்ளது. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்