குரூப் 2a மெயின் தேர்வு நடைபெறுமா..? ஷாக்கில் இளைஞர்கள்... சிக்கலில் TNPSC

x

கடந்த 14ஆம் தேதி, நான்காயிரத்து 186 பேர் பங்கேற்ற அரசு உதவி வழக்கறிஞர் தேர்வு கணினி வழியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்த டிஎன்பிஎஸ்சி, வரும் பிப்ரவரி 22ஆம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தது. அதேநேரம், குரூப் 2 ஏ முதல் நிலை தேர்வு எழுத 23 ஆயிரம் பேர் தகுதி பெற்ற நிலையில், அவர்களுக்கு கணினி வழியில் தேர்வு நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறால் உதவி வழக்கறிஞர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், குரூப் 2 ஏ தேர்வு கணினி வழியில் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய முக்கிய தேர்வுகள், தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுவது அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்