TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு..! குரூப் 2A மெயின்ஸ்... திடீர் மாற்றம் - வெளியான அறிவிப்பு
பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் குரூப் 2A முதன்மை தேர்வு கணினி வழியில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. தேர்வை 23 ஆயிரம் பேர் எழுதுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த சூழலில் கடந்த 14 ஆம் தேதி அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான கணினி வழி தேர்வை 4 ஆயிரத்து 186 பேர் எழுதிய போது மிகப்பெரும் தொழில்நுட்ப குளறுபடி ஏற்பட்டது. பலர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டதால் தேர்வை டி.என். பி.எஸ்.சி. ரத்து செய்தது. குறைந்த எண்ணிக்கையிலான தேர்வர்களுக்கே கணினி வழியில் தேர்வை சரியாக நடத்த முடியாத வேளையில் 23 ஆயிரம் பேர் பங்கேற்கும் தேர்வை சரியாக நடத்த முடியுமா? என கேள்வி எழுந்தது. இதுகுறித்து தந்தி டிவியில் செய்தி வெளியானது. இந்த நிலையில் குரூப் 2 A முதன்மை தேர்வு கணினி வழிக்கு பதிலாக, ஓ.எம்.ஆர். தாளில் விடைகளை பூர்த்தி செய்யும் வகையில் நடைபெறும் என மாற்றி டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.