TNPSC தேர்வு எழுதியவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - காலி பணியிடங்கள் அதிகரிப்பு
குரூப் 2, 2a பிரிவுகளில் 2 ஆயிரத்து 327 காலி பணியிடங்களுக்கு முதல் கட்ட போட்டி தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி நடத்தியுள்ளது. இந்நிலையில், 213 இடங்களை கூடுதலாக அதிகரித்து, டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 540 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தேர்வு எழுதிய பட்டதாரிகளுக்கு கூடுதல் வேலை வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
Next Story