10,701 பேருக்கு அரசுப்பணி..! - TNPSC வெளியிட்ட அதிமுக்கிய அறிவிப்பு
கடந்த 2 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டு நிலுவையில் இருந்த 30 வகையான தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு இந்த ஆண்டு 10 ஆயிரத்து 701 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 2024-ஆம் ஆண்டின் செயல்பாடுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டிருந்த 30 வகையான தேர்வுகளை விரைவாக நடத்தி தேர்வு முடிவுகளை வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுகளின் மூலம், அரசின் பல்வேறு துறைகளில் 10 ஆயிரத்து 701 பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவுகள் வழங்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது. பல்வேறு தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதோடு, தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
Next Story