``அதிமுகவுக்கு பொதுச்செயலாளர் இல்லை..'' - பரபரப்பை கிளப்பிய மனு
தற்போதைய நிலையில் அதிமுகவுக்கு பொதுச்செயலாளர், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் இல்லை என தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த கூடுதல் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் படிவங்களான படிவம் ஏ மற்றும் படிவம் பியில் பொதுச் செயலாளர் என்ற முறையில் அல்லது வேறு பொறுப்பில் கையொப்பமிட தடை செய்ய வேண்டும் என்றும் கூடுதல் மனுவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுகவின் திருத்தப்படாத கட்சி விதிகளின்படி புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.
Next Story