வழக்கை விசாரிக்க லஞ்சம் காவல்துறை..! இன்ஸ்பெக்டர், SI மீது அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புபோலீஸ்

x

பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கருப்பையா என்பவர் வீட்டில், கடந்த 7-ம் தேதி, 80 சவரன் நகைகள், 3 லட்சத்து 23 ஆயிரம் ரொக்க பணம், ஏழு லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கை கடிகாரம் இரண்டு, ஒரு லட்சம் மதிப்புள்ள தங்க கை கடிகாரம் ஆகியவை திருடு போயிருந்தது. இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய

பெரும் தொகையை லஞ்சமாக தர வேண்டும் என திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய காவலர் வினோத் மூலம் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் கருப்பையாவிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குற்றவாளியை போலீஸ் கைது செய்த தகவல் அறிந்து கருப்பையா, காவல் நிலையத்திற்கு சென்றார். அப் போது 25 சவரன் நகைகள் மட்டும் திரும்ப கொடுத்துள்ளனர். மீதி நகை, பணம், கைகடிகாரத்திற்கு சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி,

கருப்பையா மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி, போலீஸ்காரர் வினோத், ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்