"வாக்குக்காக குமாரசாமி என்ன வேண்டுமானாலும் செய்வார்.." மத்திய அமைச்சரை விமர்சித்த கர்நாடகா அமைச்சர்

x

கர்நாடகா சன்னபட்னா இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் எச். டி. குமாரசாமி மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக குமாரசாமி தீவிர பிரசாரம் செய்த சூழலில், அவருக்கு அம்மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான் காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார். குமாரசாமிக்கு இஸ்லாமியர்களின் ஹிஜாப் தேவை இல்லை, ஆனால் அவர்களின் வாக்கு மட்டும் தேவை, இஸ்லாமியர் வாக்குக்காக குமாரசாமி என்ன வேண்டுமானாலும் செய்வார் என விமர்சனம் செய்தார். நாங்கள் நினைத்தால் அனைவரும் ஒவ்வொரு ரூபாயாக சேர்த்து குமாரசாமியின் குடும்பத்தையே விலைக்கு வாங்குவோம் என ஜமீர் அகமதுகான் பேசியது கர்நாடகா இடைத்தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்