ஜெயிலில் உள்ள ஸ்ரீரங்கம் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு...பாய்ந்தது பெண் வன்கொடுமை சட்டம்...
ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் மற்றும் தமிழக முதல்வர் குடும்பம் குறித்து அவதூறாக வீடியோ பதிவிட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜ நரசிம்மன் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு வழக்கு அவர் மீது பதியப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் தேதி, பெண் வழக்கறிஞர் ஒருவரைப் பற்றி சமூக வலைத்தளத்தில் அவதூறான கருத்தை பதிவிட்டதற்காக அவர்மீது நேற்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்வதற்கான ஆணையை புழல் சிறை நிர்வாகத்திடம் திருவல்லிக்கேணி போலீசார் வழங்க உள்ளனர்.
Next Story