Ex DGP சைலேந்திரபாபுவுக்கே தெரியாமல்... `சதிவலை' - சென்னை டூ நெல்லை - அதிர வைத்த நெட்ஒர்க்

x

முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி முகநூல் ஐடி உருவாக்கி, நூதன முறையில் பணம் பறிக்க முயன்ற கும்பல் குறித்த பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

நெல்லை மாவட்டம் பரப்பாடியை சேர்ந்த ஜெயசீலன், முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் என சமூக வலைத்தளங்களில் ஆர்வமுள்ளவர்...

அதே போல், முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவின் மோட்டிவேஷனல் ஸ்பீச்சால் ஈர்க்கப்பட்டு, அவரின் சமூக வலைத்தள பக்கத்தையும் பின் தொடர்பவர்...

இதனை சாதகமாக பயன்படுத்தி மோசடி செய்ய களமிறங்கியுள்ளது ஒரு கும்பல்...

ஒரு நாள், சைலேந்திரபாபுவின் முகநூல் பக்கத்தை போலவே இருந்த ஒரு ஐடியில் இருந்து ஜெயசீலனுக்கு பிரண்ட் ரிக்வெஸ்ட் வந்துள்ளது. உடனே அதனை அக்சப்ட் செய்து அதில் பதிவிடப்படும் போஸ்ட்களுக்கு லைக் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், திடீரென ஒரு நாள் அந்த ஐடியில் இருந்து மெசெஞ்சர் மூலம் ஜெயசீலனுக்கு மெசேஜ் வந்துள்ளது.

தனக்கு நெருக்கமான சந்தோஷ் குமார் என்னும் சிஆர்பிஎஃப் அதிகாரி ஒருவர் சென்னையில் இருந்து திடீரென பணிமாறுதலாகி செல்வதால், அவரது வீட்டில் உள்ள பர்னிச்சர் பொருட்கள் உள்ளதாகவும் அதனை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக அவரது மொபைல் நம்பரை பெற்றுள்ளார்.

பொருட்களை வாங்க ஜெயசீலனும் முன் வர, பல கட்டுக்கதைகள் கூறி அவரிடமிருந்து பணம் பறிப்பதிலேயே மும்முரமாக இருந்துள்ளனர்..

இதன் பின்னர் சந்தேகம் வலுக்க, சுதாரித்துக் கொண்ட ஜெயசீலன், அது போலி கணக்கு என்பதை அறிந்துள்ளார்.

தன்னிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்ட கும்பலிடம் இருந்து தப்பிய அவர், இவ்வளவு நூதனமாக மோசடியில் ஈடுபடும் கும்பலை போலீசார் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்...

இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி கும்பலிடம் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதே ஒரே வழி என அறிவுறுத்துகின்றனர் விவரமறிந்தவர்கள்...


Next Story

மேலும் செய்திகள்