தமிழக அரசா? மத்திய அரசா? - பெரும் குழப்பத்தில் ராமநாதபுரம்

x

ராமநாதபுரம் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம், மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படுகிறதா? அல்லது மத்திய அரசு நிதியிலா என்று மத்திய அமைச்சரின் பேட்டியால் சந்தேகம் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் பூபதி ராஜு ஸ்ரீனிவாச சர்மா, ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமநாதபுரத்தில் குடிநீருக்காக ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாயை மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார். 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், மத்திய அமைச்சரின் பேட்டியால், மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படுகிறதா? அல்லது மத்திய அரசு நிதியிலா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்