அரசின் தலைமை வழக்கறிஞரானார் பி.எஸ்.ராமன்... ஆளுநர் உத்தரவு | TN Govt
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வந்த மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அரசின் பரிந்துரையை ஏற்று, தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை நியமித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே கடந்த 2009 முதல் 2011ம் ஆண்டு வரை, திமுக ஆட்சியில் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்துள்ளார்.
Next Story