தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு
வரும் 25-ம் தேதிக்குள், தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி ஆசிரியர்களுக்கு பணி இட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெறும் என்று, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், கல்லூரிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு நடைபெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அரசினர் பொறியியல் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசினர் சிறப்புப் பயிலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கான பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வினை உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த உத்தரவிட்டுள்ளது. வரும் 25-ம் தேதிக்குள்ளாக, வெளிப்படைத் தன்மையுடன், இணையவழியின் வாயிலாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.