அரசு டெண்டர்.. ஐகோர்ட் மதுரை பெஞ்ச் கிடுக்குப்பிடி கேள்வி
சாலை பணிகளை மொத்தமாக பேக்கேஜ் டெண்டர் முறையில் ஏலம் விட்டால், சிறிய ஒப்பந்ததாரர்களின் நிலை என்ன ஆகும் என உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை பணிகளுக்கான பேக்கேஜிங் டெண்டர் அரசாணையை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், 50 கோடி ரூபாய் மதிப்பில், மொத்தம் 49 சாலைப் பணிகள் அனைத்தும் பேக்கேஜிங் டெண்டர் முறையில் வழங்கப்பட உள்ளதாக மனுதாரார்கள் தெரிவித்தனர்.
திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் தனித்தனியாக சாலை பணிகள் டெண்டர் விடப்படும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் பேக்கேஜிங் நடைமுறை அமல்படுத்துவது சட்டவிரோதம் என வாதிடப்பட்டது,
பொதுப்பணித்துறையில் நடைமுறையில் இருந்த பேக்கேஜிங் டெண்டர் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சாலை பணிகளை மொத்தமாக பேக்கேஜ் டெண்டர் முறையில் விட்டால், சிறிய ஒப்பந்ததாரர்களின் நிலை என்ன ஆகும், அவர்கள் எப்படி முன்னேற முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், இறுதி உத்தரவுக்காக ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.