தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு

x

கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்கும் பணியை முடிக்க தமிழக அரசுக்கு மேலும் நான்கு வாரம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிந்துக் கோயில்களை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான அறங்காவலர் குழு அமைக்க கோரி

ஹிந்து தர்ம பரிஷத் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற அமர்வு இன்று விசாரணை செய்தது.

இதுவரை 7 ஆயிரத்து 661 கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,

2 ஆயிரத்து 902 கோயில்களுக்கான அறங்காவலர்கள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

வழக்குகள் காரணமாக ஆயிரத்து 284 கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்க முடியாத சூழல் உள்ளதாக தெரிவித்தார்.

இதை ஏற்ற உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு நான்கு வாரம் அவகாசம் அளித்து. விசாரணையை பிப்ரவரி 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்