எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி | SC ST | TN Govt | Educational Loan

x

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி | SC ST | TN Govt | Educational Loan | Thanthi TV

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்விக்கடன் நிலுவை 48.95 கோடி ரூபாயை தள்ளுபடி செய்வதாக தமிழக‌ அரசு அறிவித்துள்ளது. கடந்த 1972-73 முதல், 2002-03 வரையிலான காலகட்டத்தில், மருத்துவம் மற்றும் அதனைச் சார்ந்த படிப்புகள் உள்பட அனைத்து படிப்புகளுக்கும் கல்விக் கடன் கொடுக்கப்பட்டது. இதேபோல், 2003-04 முதல் 2009-10 வரையிலான காலகட்டத்திலும் கல்விக் கடன் கொடுக்கப்பட்டது. கல்விக் கடன் நிலுவை 48.95 கோடி ரூபாயை வசூலிக்க சரியான பதிவேடுகள் இல்லாததாலும், சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காண இயலாததாலும் சிறப்பினமாக கருதி கடன் முழுவதும் தள்ளுபடி செய்வதாக அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்