கூடும் சட்டசபை... ஆளுநருடன் அப்பாவு நேரில் சந்திப்பு | RN Ravi | Appavu

x

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஜனவரி 6ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதற்கான அழைப்பிதழுடன், இன்று சபாநாயகர் அப்பாவு கிண்டி ராஜ்பவனுக்கு சென்றார். அங்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த அவர், அழைப்பிதழை வழங்கி முறைப்படி சட்டசபை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்