554 பேர் கைது - தமிழகத்திற்கு பேரதிர்ச்சி கொடுக்கும் தகவல்

x

நடப்பாண்டில், இலங்கையின் கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் 554 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் கடற்பரப்பிற்குள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. அவர்கள் வந்த 72 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடல் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், இலங்கை மீனவர்களின் கடல் தொழில் சார்ந்த பிரச்சினைகள், குறைபாடுகளை தீர்ப்பதற்கும் கடற்படை அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் என்று தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்