சிதறிய உடல்... துண்டான கை, கால்கள் - நேரில் கண்டு நடுங்கிய மக்கள்
கட்டிடத் தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மனைவி மற்றும் குழந்தை உள்ள நிலையில் திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் உள்ள உறவினருக்கு வீட்டிற்குச் சென்று இருக்கிறார்.இந்த நிலையில் பேரளம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் பாலமுருகனின் கை கால் துண்டான நிலையில் உயிரிழந்து கிடந்து இருக்கிறார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story