ருத்ரதாண்டவம் ஆடும் மழை... சுழல் நெருங்க நெருங்க தலைகீழ் நிலை - தயார் நிலையில் 235 நிவாரண மையங்கள்

x

திருவாரூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் தொடங்கிய மிதமான மழை.. தற்போது விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அது புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருவதால் நாகப்பட்டினம் மயிலாடுதுறை திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் மேலும் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் என்பது விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து தொடங்கிய நிலையில் தற்போது விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது குறிப்பாக திருவாரூர் நன்னிலம் சேந்தமங்கலம் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி காரிக்கோட்டை விளமல் வண்டாம்பாலை கோட்டூர் விக்கிரபாண்டியம் அம்மையப்பன் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்த நிலையில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

மேலும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் 176 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது மேலும் 235 நிவாரண மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது அதேபோல தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி இருந்தால் அந்த தண்ணீரை அகற்றுவதற்காக மின் மோட்டார் தயார் நிலையில் உள்ளது அதேபோல ஜேசிபி வாகனம் மரம் அறுக்கும் இயந்திரம் மண் மூட்டைகள் சவுக்கை மரங்கள் மண்வெட்டி அரிவாள் போன்ற பொருள்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்