வாழ்க்கையையே புரட்டி போட்ட இயற்கை... பிள்ளைகளை தோளில் சுமந்து பள்ளிக்கு போகும் பெற்றோர்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, கன மழையால் ஏரி நிரம்பி தண்ணீர் தேங்கியதால், இருளர் இன மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். ஏம்பலம் கிராமத்தில் இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் இடுப்பளவு உபரி நீர் செல்வதால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினர். விஷப்பூச்சிகள் கடிக்கும் அபாயம் உள்ளதாகவும், எனவே சாலையை உயர்த்தி தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story