தி.மலை துயரம்.. ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்ட 7 உடல்கள்
திருவண்ணாமலை மலையில் கனமழைக்கு மத்தியில் மண் சரிவு ஏற்பட்டு விழுந்த வீட்டில் சிக்கிய 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டன. அவர்களது உடல்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்ததும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. உடல்கள் வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அமைச்சர் எ.வ. வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, ஆட்சியர் பாஸ்கர் ஆகியோர் அஞ்சலி செலுத்தியதோடு உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். இதனையடுத்து 7 பேரது உடல்களும் செங்கம் சாலையில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
Next Story