வீதிகளில் தி.மலையின் பிரமாண்டம்.. வானளவு எழுந்த அரோகரா கோஷம்

x

திருவண்ணாமலையில், 59 அடி உயரமும், 200 டன் எடையுள்ள அண்ணாமலையாரின் மகா ரத தேர், 70 லட்ச ரூபாய் செலவில் பழுது பார்க்கப்பட்டுள்ளது. அண்ணாமலையாரின் மகாரத தேரின் வெள்ளோட்டம் மாட வீதிகளில் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று கோஷமிட்டு தேரினை வடம் பிடித்து மாட வீதிகளில் வலம் வந்தனர். வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் அன்று, பஞ்சமூர்த்திகளின் மகாரத தேரோட்டம் மாட வீதிகளின் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்