இரவில் அலறவிட்ட JCB சத்தம்.. குலைநடுங்கி ஓடி வந்த ஊர் மக்களுக்கு பேரதிர்ச்சி

x

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே இரவோடு இரவாக மர்மநபர்கள் பயணியர் நிழற்குடையை இடித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மஷார் கிராமத்தில் உள்ள பயணியர் நிழற்குடை அருகே புதிய நிழற்குடை கட்டித் தர வேண்டும் என எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை அளித்திருந்தனர். இந்நிலையில் இரவோடு இரவாக பழைய நிழற்குடையை ஜேசிபி இயந்திரம் மூலம் மர்ம நபர்கள் இடித்துள்ளனர். சத்தம் கேட்டு மக்கள் வெளியே வருவதை அறிந்த கும்பல், பாதியிலேயே நிறுத்திவிட்டு தப்பியுள்ளது. இந்த செயலில் ஈடுபட்டது யார் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்