பஸ்ஸில் சீட் பிடிக்க பேக் வீசிய மகள் அடையாளமே தெரியாமல் கோர மரணம்

x

சீட் பிடிக்கும் அவசரத்தில் பஸ்சில் ஏறிய பட்டதாரி மாணவி ஒருவர், நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். மனதை ரணமாக்கி இருக்கும் இந்த துயர சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..கல்லூரி படிப்பை முடித்து விட்டு, டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயராகி வந்த மாணவிக்குதான் இந்த கோர விபரீதம்... திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் கெளதமி..இளங்கலை அறிவியலில் பட்டம் பெற்ற இவர், வேலைக்காக கண்ணமங்களத்தில் இயங்கி வரும் டி.என்.பி.எஸ்.சி பயிற்சி முகாமில் சேர்ந்து படித்து வந்திருக்கிறார்..இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் பயிற்சி முடித்து விட்டு, வீட்டிற்கு செல்வதற்காக கண்ணமங்கலம் பேருந்து நிலையத்திற்கு கெளதமி வந்ததில் இந்த துயரச் சம்பவம் அரங்கேறி இருக்கிறது..ரெட்டிபாளையம் செல்லும் அரசு பேருந்தை கண்டதும் ஓடிச் சென்று பேருந்தில் ஏறிய கெளதமி, பேருந்தின் படிக்கட்டில் நின்றபடியே சீட் பிடிப்பதற்காக தன் பேக்கை தூக்கி சீட்டை நோக்கி வீசியிருக்கிறார்..அப்போது, எதிர்பாராதவிதமாக பேருந்து ஓட்டுநர், பேருந்தை பின்பக்கமாக இயக்கியதில், நிலை தடுமாறி கெளதமி கீழே விழுந்ததில், பேருந்தின் பின் பக்க சக்கரம் தலையில் ஏற, தலை நசுங்கி உயிரிழந்திருக்கிறார்..கெளதமியை போல் இன்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் பேருந்தில் இருக்கையை பிடிக்கும் அவசரத்தில் விபரீதம் அறியாமல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கெளதமியின் மரணம் அவர்களின் தலையில் பேரிடியாய் விழுந்திருக்கிறது..இதனிடையே, கெளதமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார், சம்பந்தப்பட்ட அரசு பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....


Next Story

மேலும் செய்திகள்