92% மார்க் எடுத்த மாணவியின் அதிர்ச்சி முடிவு - பள்ளி அப்படி செய்திருந்தால் கடும் நடவடிக்கை -கலெக்டர்

x

92% மதிப்பெண்கள் எடுத்த மாணவியின் அதிர்ச்சி முடிவு - பள்ளி அப்படி செய்திருந்தால் கடும் நடவடிக்கை இறங்கிய கலெக்டர்

திருவள்ளூர் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவி பெட்ரோல் ஊற்றி த*கொ*க்கு முயன்ற சம்பவத்தில், மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார். மாணவியை அதிக மதிப்பெண் எடுக்க உளவியல் ரீதியாக பள்ளி நிர்வாகம் தொந்தரவு செய்திருந்தால் பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 92 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்த அந்த மாணவி, தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்