பின் தலையை அரிவாள் வெட்டி முன் கழுத்தை கத்தியால் அறுத்து.. நினைத்து கூட பார்க்க முடியாத கோர மரணம்.. தழுதழுக்க பேசிய தந்தை

x

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, இளைஞர் ஒருவரை கொன்று சடலத்தை மைதானத்தில் வீசிச் சென்ற மர்மநபர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லா குப்பம் காலனியை சேர்ந்தவர் அஜய். 21 வயதான இவர், கூலி வேலை செய்து வந்த நிலையில், சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் எங்கு தேடியும் அவரைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இந்நிலையில், பில்லா குப்பம் காலனி அருகிலுள்ள மைதானத்தில்.. கழுத்தறுக்கப்பட்டும், உடலின் ஒரு பகுதி தீ வைத்து கொளுத்தப்பட்டும் இளைஞர் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞரின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசார் ஆய்வு செய்தபோது, மைதானத்தில் சடலமாக கிடந்த அஜய்யின் பின்பக்க தலையில் பலத்த அரிவாள் வெட்டும், முன் கழுத்து பகுதி கத்தியால் அறுக்கப்பட்டு, குரல்வளை வெளியே பிதுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது


Next Story

மேலும் செய்திகள்