6 பேரை அரிவாளால் வெட்டிய விவகாரம்... போலீசாருடன் உறவினர்கள் கடும் வாக்குவாதம்! சென்னை அருகே பரபரப்பு

x

திருவள்ளூர் மாவட்டம் ராமச்சந்திராபுரத்தில், ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்து புதிதாக குடியமர்த்தப்பட்டவர்கள் உள்ள பகுதியில் இருந்த கடைக்கு சென்ற இளைஞரை, சிலர் தாக்கியதுடன், அதனை தட்டிக்கேட்ட 5 பேரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதுதொடர்பாக தேவராஜ் என்பவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், புதிதாக குடியமர்த்தப்பட்டவர்களை காலி செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்