வெள்ளத்தில் அடித்து சென்ற தரைப்பாலம்.. இறந்தவரின் உடலை ஆற்று நீரில் சுமந்து செல்லும் அவலம்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் உயர்மட்ட மேம்பாலம் இல்லாததால், இறந்தவரின் உடலை ஆற்றுநீரில் சுமந்து எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்தனர். காரணி அருகே தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் காரணி, நெல்வாய் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பெரியபாளையம் வழியாக 10 கிலோ மீட்டர் சுற்றி செல்கிறனர். இந்நிலையில், ஆரணியில் பெண் ஒருவர் இறந்துவிட்டதால், ஆற்று நீரில் சடலத்தை சுமந்து மறுகரைக்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்துள்ளனர். எனவே, உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story