தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி... தவெக பிரமுகர் உயிரை பறித்த ஜிம்! திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

x

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார்.வல்லூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்து இருக்கிறார். தினமும் அத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் ஜிம்மில் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்து இருந்து இருக்கிறார்.இந்த நிலையில் சம்பவத்தன்று உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வினோத்குமாரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர்.ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வினோத்குமார் உயிரிழந்து இருக்கிறார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 15 வருடமாக வினோத்குமார் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. மேலும் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திலும் அண்மையில் வினோத்குமார் இணைந்ததும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்