கோவில் முகப்பு மண்டபம் இடிப்பு குவிக்கப்பட்ட போலீஸ்..! திருவள்ளூரில் பரபரப்பு | Tiruvallur
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக சிலம்பாத்தம்மன் கோவில் முகப்பு மண்டபம் இடிக்கப்பட்டது. முன்னதாக சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்ட நிலையில், கட்டர் இயந்திரத்தின் உதவியுடன் முகப்பு மண்டபம் தனியாக அறுத்து பிரிக்கப்பட்ட நிலையில் ஜேசிபி இயந்திர உதவியுடன் மண்டபத்தின் தூண் உடைக்கப்பட்டது. கோவில் அருகே உள்ள வேப்பமரம் மற்றும் அரச மரத்தை வேருடன் அகற்றி மறு நடவு செய்யவும் நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Next Story