பிரபல பஜாரில் நடந்த அதிர்ச்சி...நடுரோட்டில் நடந்த களேபரம் - பரபரப்பு காட்சிகள்

x

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரான ஜி.என்.டி சாலையில் தனியார் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்தன. கடந்த 16ம் தேதி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சாலையோர தனியார் ஆக்கிரமிப்புகள் மற்றும் சாலையோர கடைகளை அகற்றினர். இதனை தொடர்ந்து, சாலையோரம் கடை நடத்தி வந்த நரிகுறவர்கள் தங்களுக்கு முறையான கடைகள் ஒதுக்கப்படவில்லை என பேரூராட்சி நிர்வாகத்தின் மீது புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் கடைகளை அகற்ற வந்த நெடுஞ்சாலை துறையினருக்கும், நரிக்குறவர் இன பெண்களுக்கும் கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்