பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து ஷட்டரை மூடி பெண்ணிடம் இருவர் செய்த காரியம் - மிரளவிடும் சிசிடிவி

x

பட்டப்பகலில் டயர் விற்பனை கடையின் உரிமையாளரின் மனைவியை மிரட்டி நகை பறித்த வழக்கில் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகத்ராஜன். இவரது வீட்டின் அருகே டயர் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 29ம் தேதி ஜெகத்ராஜனின் மனைவி கோமதி கடையிலிருந்த போது, அவரது கடையில் நுழைந்த இருவர் கத்தி முனையில் அவர் அணிந்து இருந்த 8 சவரன் நகை மற்றும் பணம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிப் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்குமார் உட்பட மூவரைக் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட மூவர் மீதும் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்