சுரங்கப்பாதையில் கலந்த கழிவுநீர்...அதிர்ச்சி காட்சிகள்... மக்கள் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மழைநின்ற போதிலும், ரயில்வே சுரங்கப்பாதையில் கழிவு நீர் தேங்கி காணப்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் பூச்சு மற்றும் பக்கவாட்டு சுவர் வழியாக கழிவு நீர் கசிந்து வருகிறது.இதனால் துர்நாற்றம் வீசும் நிலையில், சுகாதார சீர்கேட்டால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சுரங்கப்பாதையில் இருந்து கழிவுநீரை ரயில்வே ஊழியர்கள் மின்மோட்டார் வைத்து அகற்றவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
Next Story