தொழிற்சாலையில் வெடித்து சிதறிய இரும்பு குழம்பு... துடிதுடித்து பலியான தொழிலாளி

x

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அடுத்த பாத்தப்பாளையம் ஊராட்சியில், தனியாருக்கு சொந்தமான மின் உற்பத்தி மற்றும் இரும்பு உருக்கு தொழிற்சாலை உள்ளது. இங்கு கொதிகலனில் இரும்பு துகள்களை போட்டு அதிக அழுத்தத்தில் உருக்கும்போது, அதிலிருந்து வெடித்து இரும்பு குழம்பு நாலாபுறமும் சிதறியது. இதில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அகிலேஷ் யாதவ் என்ற தொழிலாளி பலத்த தீக்காயங்களுடன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்