பனியன் கம்பெனியில் பற்றி எரிந்த தீ.. அலறியடித்து வெளியே ஓடிய ஊழியர்கள்

x

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தின் தரைத்தளத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று தீ பிடித்தது.நிறுவன ஊழியர்கள் வெளியேறிய நிலையில், தீ தடுப்பான்கள் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு 2 வாகனங்களில் விரைந்து வந்த வந்த தீயணைப்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக 2 மற்றும் 3ஆம் தளங்களில் தீ பரவுவது தவிர்க்கப்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்