முடிவுக்கு வந்தது திருப்பூர் மக்களை பீதியடைய வைத்த சம்பவம்
தாராபுரம் சாலை, ஐஸ்வர்யா நகர், விக்னேஸ்வரா நகர் பகுதிகளில் இன்று அதிகாலை 5 மணிமுதல் வெறிநாய் ஒன்று சாலையில் போவோர் வருவோரைக் கடித்துக் குதறியுள்ளது. படுகாயமடைந்த 11 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாநகராட்சி ஊழியர்கள் வெறி நாயை 1 மணி நேரம் போராடி பிடித்தனர். தொடர்ந்து தெரு நாய்களை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பிடிபட்ட நாய்களை தனியார் தன்னார்வ அமைப்பிடம் ஒப்படைத்து உள்ளனர். காயமடைந்த 11 பேரில் 7 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் 4 பேர் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
Next Story