பைக்கில் வளர்ப்பு நாயை டூர் கூட்டி சென்ற குடும்பம்.. "தனியா விட்டுட்டு போயிட்டா ஒரு மாதிரி அழுவான்"

x

திருப்பூரைச் சேர்ந்த ரூபன் என்பவரின் குடும்பத்தினர், தங்களது வளர்ப்பு நாயுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்றனர். திருப்பூரில் இருந்து ராமநாதபுரத்திற்கு சுமார் 250 கிலோமீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனத்திலேயே வளர்ப்பு நாயை அழைத்து சென்றனர். இதுகுறித்து பேசிய அவர்கள், சார்லி என்ற நாயை தங்களது மகனை போல வளர்த்து வருவதாகவும், தங்களை விட்டு சார்லியால் பிரிந்திருக்க முடியாது என்றும், எங்கு சென்றாலும் அதை உடன் அழைத்து சென்று விடுவதாகவும் பாசத்துடன் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்